கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.22 லட்சம் வர்த்தகம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 22.42 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று எள் 240 மூட்டை, மக்காச்சோளம் 160, கம்பு, வேர்க்கடலை தலா 10, உளுந்து, சிவப்பு சோளம் தலா 5 மூட்டைகள் என 430 மூட்டை விளை பொருட்களை கொண்டு வந்தனர்.

சராசரியாக ஒரு மூட்டை எள் 7,900, மக்காச்சோளம் 2,340, கம்பு 2,515, வேர்க்கடலை 6,869, உளுந்து 4,254, சிவப்பு சோளம் 4,294 ரூபாய்க்கு க்கு கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக 22 லட்சத்து 42 ஆயிரத்து 521க்கு வர்த்தகம் நடந்தது.

சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 65 மூட்டை, எள் 5, திணை 3 மூட்டை என 73 மூட்டை விளை பொருட்கள் கொண்டு வந்தனர். ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,367, எள் 9,255, திணை 3001 ரூபாய் என ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 423 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

தியாகதுருகம் கமிட்டியில் நெல் 60 மூட்டை, மக்காசோளம் 40, எள் 31, கம்பு 28, உளுந்து 2 மூட்டை என மொத்தம் 161 மூட்டை விளைபொருட்கள் வந்தது.

சராசரியாக நெல் 2,156, மக்காசோளம் 2350, எள் 8,950, கம்பு 2,600, உளுந்து 5,765 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தம் 4 லட்சத்து 52 ஆயிரத்து 745 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

Advertisement