வெற்றியை நோக்கி இலங்கை: வங்கதேச அணி தடுமாற்றம்

கொழும்பு: வங்கதேச பேட்டர்கள் தடுமாற, இலங்கை அணி வெற்றியை நோக்கி முன்னேறுகிறது.
இலங்கை சென்றுள்ள வங்கதேச அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் 'டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் நடக்கிறது. வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 247 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 290/2 ரன் எடுத்திருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணிக்கு பதும் நிசங்கா (158) நம்பிக்கை தந்தார். கேப்டன் தனஞ்செயா டி சில்வா (7) ஏமாற்றினார். கமிந்து மெண்டிஸ் (33) ஓரளவு கைகொடுத்தார். குசால் மெண்டிஸ் (84) அரைசதம் கடந்தார். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 458 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. வங்கதேசம் சார்பில் தைஜுல் 5 விக்கெட் சாய்த்தார்.
பின் 2வது இன்னிங்சை துவக்கிய வங்கதேச அணிக்கு அனாமுல் ஹக் (19), மோமினுல் ஹக் (15), கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (19) சோபிக்கவில்லை. பிரபாத் ஜெயசூர்யா 'சுழலில்' முஷ்பிகுர் ரஹிம் (26) போல்டானார். ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 115 ரன் எடுத்து, 96 ரன் பின்தங்கி இருந்தது. லிட்டன் தாஸ் (13) அவுட்டாகாமல் இருந்தார்.
நான்காம் நாள் ஆட்டத்தில் பவுலர்கள் அசத்தினால், இலங்கை அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று, தொடரை 1-0 எனக் கைப்பற்றலாம்.
மேலும்
-
கடனுக்காக ஆசிரியரை கடத்தி அராஜகம் போலீசில் புகார் அளிக்க குடும்பத்தினர் பீதி
-
கடம்பத்துார் ரயில்வே சுரங்கப்பாதை பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் அவதி
-
போதை ஒழிப்பு விழிப்புணர்வு
-
கன்னட ஆடி முதல் வெள்ளி கோலாகலம்
-
அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா; 5 மணி நேரம் நீடித்த பரபரப்பு
-
வாரிய தலைவர் பதவி அளிக்க பா.ஜ., முடிவு; விரைவில் அறிவிப்பு வெளியாகிறது