ஹெட் அரைசதம்: ஆஸி., முன்னிலை

பிரிட்ஜ்டவுன்: வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்டில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பிரிட்ஜ்டவுனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 180 ரன் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடைசி நேரத்தில் ராஸ்டன் சேஸ் (44), ஹோப் (48) கைகொடுக்க முதல் இன்னிங்சில் 190 ரன்னில் ஆல் அவுட்டாகி, 10 ரன் முன்னிலை பெற்றது.
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கான்ஸ்டாஸ் (5), கவாஜா (15) ஜோடி துவக்கத்தில் ஏமாற்றியது. கேமாரன் கிரீன் 15 ரன்னில் கிரீவ்ஸ் பந்தில் அவுட்டானார். இங்லிஸ் (12), ஜேடன் சீலஸ் பந்தில் போல்டானார். இரண்டாவது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்சில் 92/4 ரன் எடுத்து, 82 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ஹெட் (13), வெப்ஸ்டர் (19) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஹெட் அபாரம்
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் வேகங்களை சமாளித்த இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். கிரீவ்ஸ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஹெட் (61), வெப்ஸ்டர் (63) அரைசதம் அடித்தனர். ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 233/6 ரன் எடுத்து 223 ரன் முன்னிலை பெற்றிருந்தது. அலெக்ஸ் கேரி (43), கம்மின்ஸ் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.
மேலும்
-
முதல்வர் விழாவில் விஜய் படம்; மாணவர்களால் திடீர் சர்ச்சை
-
நல்லாமுத்து குளத்தை சீரமைக்க தேவராஜபுரம் கிராமத்தினர் கோரிக்கை
-
பேருந்து பயணியர் நிழற்குடை சீரமைப்பு
-
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
-
சாலையில் சுற்றி திரியும் மாடுகள் கட்டுப்படுத்த வேண்டுகோள்
-
தி.மு.க., பொதுச்செயலர் பதவி யாருக்கு? டி.ஆர்.பாலு - ஆ.ராஜா இடையே போட்டி