'தி.மு.க., வை அகற்றும் எண்ணத்துடன் வந்தால் த.வெ.க., வை வரவேற்போம்'

கோவை:
''தி.மு.க., வை அகற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தால், த.வெ.க., வை வரவேற்போம்,'' என, பா.ஜ., மாநில பொது செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் கூறினார்.

கோவையில் செய்தியாளர்களிடம்அவர் கூறியதாவது:

தமிழ்நாடு என்றும் தேசியத்தின் பக்கம் தான் என, பொதுமக்கள் காட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து சொல்ல வேண்டும்.அ.தி.மு.க., கொள்கைக்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. அண்ணாதுரை குறித்து பேசியது இந்து முன்னணி. அவர்கள் பா.ஜ., வையே விமர்சிப்பர்.

இந்து முன்னணி மாநாட்டில் வந்த வீடியோவில், ஈ.வே.ரா., அண்ணாதுரை குறித்து காண்பிக்கப்பட்டது. இந்து முன்னணி எந்த கட்சிக்கும் அடிமையில்லை. அவ்வாறு காண்பித்தது. அ.தி.மு.க., பா.ஜ., வையும் குறிக்காது. ஒரே மேடையில் உள்ளோம் என்பதற்காக, மாறுபட்ட கருத்துக்களை கூறக்கூடாது என இல்லை. எங்களை பொறுத்தவரை அமித்ஷா, பழனிசாமி பேசி இறுதி முடிவு அறிப்பர். அதுவே எங்கள் முடிவு. 1999 - 2004 வரை கூட்டணி வைத்திருந்த போது, தி.மு.க., வுக்கு பா.ஜ., மதவாத கருத்துக்களை பரப்புவதாக தெரியவில்லையா.தி.மு.க.,வை அகற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தால், த.வெ.கா.,வையும் வரவேற்போம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement