தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.71,320!

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 30) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,915க்கு விற்பனை ஆகிறது.
தமிழகத்தில், ஜூன் 21ம் தேதி தங்கம் கிராம், 9,235 ரூபாய்க்கும், சவரன், 73,880 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த சனிக்கிழமை (ஜூன் 28) தங்கம் விலை கிராமுக்கு, 55 ரூபாய் குறைந்து, 8,930 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 440 ரூபாய் சரிவடைந்து, 71,440 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, 305 ரூபாயும், சவரனுக்கு, 2,440 ரூபாயும் சரிவடைந்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில், வார தொடக்க நாளான இன்று (ஜூன் 30) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,320க்கு விற்பனை ஆகிறது.
கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,915க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை சற்று குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும்
-
மகன் வாங்கிய கடனுக்கு தந்தையை கடத்தி கை விரலை வெட்டிய கந்து வட்டி கும்பல்
-
2024-25ல் ரூ.22.08 லட்சம் கோடி ஜி.எஸ்.டி., வருவாய்: 9.4 சதவீத வளர்ச்சியை எட்டி சாதனை
-
அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; ஆவலுடன் காத்திருக்கிறோம் என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பேட்டி
-
லலித் மோடியின் ரூ.10.65 கோடி இழப்பீடு தொகை மனு:சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு
-
ரூ.100 கோடியில் அமைக்கப்பட்ட சாலை நடுவே மரங்கள்: வாகன ஓட்டிகள் திக்... திக்...
-
ஈரானில் உள்ள தமிழக மீனவர்களின் மீட்க கோரிக்கை