தலைவர் காங்., மேலிடம் இல்லையென்றால் வேறு யார்: கார்கேவுக்கு பா.ஜ., கேள்வி

7


புதுடில்லி: கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் குறித்து காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும் என அக்கட்சி தலைவர் கார்கே கூறியதை விமர்சித்துள்ள பா.ஜ., கட்சி தலைவர் மேலிடம் இல்லையென்றால், வேறு யார் என கேள்வி எழுப்பி உள்ளது.


காங்கிரஸ் தலைவர் கார்கே நிருபர்களை சந்தித்தார். அப்போது கர்நாடகாவில் முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா மாற்றப்படுவாரா என கேள்வி எழுப்பப்பட்டது.


இதற்கு பதிலளித்த கார்கே, ஆட்சி மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்க கட்சி மேலிடத்துக்கு அதிகாரம் உண்டு. கட்சி மேலிடத்தில் என்ன நடக்கிறது என்பதை இங்கு யாரும் சொல்ல முடியாது. அவர்களின் முடிவுக்கு உட்பட்டது. மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், கட்சி மேலிடத்துக்கு இருக்கிறது. தேவையில்லாமல், யாரும் இங்கு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றார்.


இதனை விமர்சித்துள்ள பா.ஜ., எம்.பி., தேஜஸ்வி சூர்யா, ''காங்கிரஸ் மேலிடம் பேய் போன்றது. அதனை யாரும் பார்க்க முடியாது. கேட்க முடியாது. ஆனால், உணர முடியும். காங்கிரஸ் மேலிடம் என அக்கட்சி தலைவர் என மக்கள் கருதும் நேரத்தில் அவர், அதன் பெயர் குறித்து கிசுகிசுக்கிறார். தான் இல்லை என சொல்கிறார்''. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement