மனிதனை கடிக்கும் முன் சிறுத்தையை புடிங்கோ ஆட்டை, மாட்டை கடிச்சு, நாயையும் கடிச்சாச்சு
சத்தியமங்கலம், தாளவாடி மலை, ஆசனுார் அருகேயுள்ள அரேபாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் நாய் வளர்த்து வருகிறார். வழக்கம்போல் வீட்டு முன் நாயை நேற்று கட்டி போட்டிருந்தார்.பட்டப்பகலில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை நாயை தாக்கியுள்ளது. வலியால் நாய் சத்தமிடவே அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். இதனால் சிறுத்தை ஓடி விட்டது. சில மாதங்களாக இப்பகுதியில் கால்நடை, கோழிகளை சிறுத்தை வேட்டையாடி வருகிறது. கூண்டு வைத்து சிறுத்தைய பிடிக்க வேண்டும் என்று, மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று முன்தினம் பசு மாட்டை சிறுத்தை தாக்கியது. இந்நிலையில் வளர்ப்பு நாயை தாக்கியுள்ளது. ஆட்டை கடித்து, மாட்டை கடித்து மனிதனை கடிப்பதற்கு முன், சிறுத்தைய பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று, மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
ஒன்பதாவது ஆண்டில் ஜி.எஸ்.டி.,
-
அதிகாரிகள் ராஜினாமாவால் கர்நாடகா வங்கி பங்கு சரிவு
-
சிறுசேமிப்பு திட்டங்கள் வட்டியில் மாற்றமில்லை
-
'இ.பி.எப்.ஓ., ஓய்வூதியம் பெற புதிய படிவம் தேவையில்லை'; வதந்தி குறித்து மத்திய அரசு விளக்கம்
-
உணவு பதப்படுத்துதல் ஊக்குவிப்பு மெட்ராஸ் ஐ.ஐ.டி., உடன் ஒப்பந்தம்
-
லேசர் தொழில்நுட்பத்தில் ஜென் நிறுவனம் காப்புரிமை