கஞ்சா விற்ற வாலிபர் கைது



சேலம், சேலம் மாவட்டம், வீராணம் போலீசாருக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் எஸ்.ஐ. மோகன் தலைமையில் போலீசார், பீமனுார் ஆற்றோரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் தாதம்பட்டியை சேர்ந்த சீனிவாசன், 30, என்பதும் அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார், நேற்று முன்தினம் கைது செய்து,10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement