வீடு உட்பட 2.83 கோடி நுகர்வோருக்கான கட்டண உயர்வை அரசே ஏற்கும்: அமைச்சர் வீடுகள் உள்ளிட்ட 2.83 கோடி நுகர்வோருக்கு இல்லை
சென்னை : 'தமிழகத்தில் வீடுகள் உட்பட, 2.83 கோடி நுகர்வோருக்கு மின் கட்டண உயர்வு இல்லை. இதனால், அரசுக்கு ஆண்டுக்கு, 520 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். இந்த தொகையை மின் வாரியத்திற்கு அரசு வழங்கும். பெரிய தொழில், வணிக நிறுவனங்கள், பிற வகை பிரிவுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படும்' என, மின்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மின் வாரியங்களின் நிதி நிலைமை சீராக இருக்க, அந்தந்த மாநில ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தில் மாற்றம் செய்கின்றன. அதன்படி, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆண்டுதோறும் மின் கட்டணத்தை மாற்றி, ஆணை வெளியிடுகிறது.
இதன்படி, இம்மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் கட்டண மாற்றங்களில், 2.42 கோடி வீட்டு நுகர்வோர் களுக்கான கட்டண உயர்வை அரசே ஏற்று, அதற்கான மானிய தொகையை, மின் வாரியத்திற்கு வழங்கும்
அனைத்து வீட்டு நுகர்வோருக்கும், 100 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடரும். குடிசை வீடுகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும். 100 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோ ருக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டுக்கு, 374.89 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவாகும்
தற்போது, விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிபாட்டு தலங்கள் மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலை ஆகிய பிரிவுகளுக்கான மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்
இரு மாதங்களுக்கு, 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிக மின் நுகர்வோருக்கு உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை, தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டுக்கு, 51.40 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும். இதனால், 34 லட்சம் சிறு வணிக நுகர்வோர்கள் பயன் பெறுவர்.
ஐம்பது கிலோ வாட் வரையான தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள கட்டணத்தை, அரசே ஏற்று மானியமாக வழங்கும். ஆண்டுக்கு, 76.35 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். இதனால், 2.81 லட்சம் தாழ்வழுத்த ஆலைகள் பயன் பெறும்
குடிசை மற்றும் குறுந்தொழில்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை, அரசு ஏற்று மானியமாக வழங்குவதால் ஆண்டுக்கு, 9.56 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். இதனால், 2.70 லட்சம் குடிசை மற்றும் குறுந்தொழில் பயன் பெறும்
விசைத்தறி நுகர்வோருக்கு, 1,000 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடரும். மேலும், 1,001 யூனிட்களுக்கு மேல் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டுக்கு, 7.64 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். இதனால், 1.65 லட்சம் விசைத்தறி நுகர்வோர்கள் பயன் பெறுவர்.
எனவே, மின் கட்டண உயர்வின்படி, தமிழகத்தில் உள்ள, 2.83 கோடி மின் நுகர்வோர் எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லாமல் பயன் பெறுவர். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு, 519.84 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். இந்த மானிய தொகையை, மின் வாரியத்திற்கு அரசு வழங்கும்.
இது தவிர, பெரிய தொழில், பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் பிற வகை கட்டண பிரிவுகளுக்கு ஆணையம் நிர்ணயித்துள்ளபடி, 3.16 சதவீதத்துக்கு மிகாமல் மின் கட்டணம் உயர்த்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
மூணாறு அருகே ஜீப் கவிழ்ந்து சென்னை சுற்றுலா பயணி பலி
-
பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: 4.96 கோடி பேர் ஆவணங்கள் சமர்ப்பிக்க தேவையில்லை
-
போலீஸ் விசாரணையில் இளைஞர் மரண வழக்கு: சி.பி.ஐ., விசாரணை தேவை: இ.பி.எஸ்., வலியுறுத்தல்
-
ஜூலையில் வெப்பம் அதிகமாக இருக்கும்
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் உயிரிழப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்வு; ஒரு சவரன் ரூ.72,160!