நடிகர்கள் கோகைன் 'நெட் ஒர்க்' என்.சி.பி., விசாரணை

சென்னை: நடிகர், நடிகையர் பயன்படுத்திய, கோகைன் போதைப் பொருள் 'நெட் ஒர்க்' குறித்து, என்.சி.பி., எனப்படும், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் விசாரணையை துவக்கி உள்ளனர்.
போதைப் பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பாக, அ.தி.மு.க., தொழில் நுட்பப் பிரிவு முன்னாள் நிர்வாகி பிரசாத், நடிகர்கள், ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களுக்கு கோகைன் சப்ளை செய்த, சேலம் மாவட்டம், சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார், சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த கெவினும் கைதாகி உள்ளனர்.
இவர்கள், நடிகர், நடிகையருக்கு, கோகைன் 'சப்ளை' செய்து வந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, என்.சி.பி., எனப்படும், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும், விசாரணையை துவக்கி உள்ளனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
கானா நாட்டை சேர்ந்த ஜான், பிரதீப்குமார் ஆகியோர், கர்நாடக மாநிலம் பெங்களூரில் மென்பொருள் நிறுவன ஊழியர்கள் போல் தங்கி, கோகைன் சப்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கானா நாட்டை சேர்ந்த ஜான் பின்னணியில் இருக்கும், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் குறித்தும், ஜானின் கூட்டாளிகள், வேறு எந்த மாநிலத்தில் பதுங்கி உள்ளனர் என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.
அதேபோல், கெவின் மற்றும் பிரசாத் வாடிக்கையாளர்கள் பட்டியலில், நடிகர், நடிகையர் உள்ளனர். அவர்கள் பயன்பாட்டிற்கு மட்டுமே கோகைன் வாங்கினரா அல்லது விற்பனைக்கா என்றும் விசாரணை நடக்கிறது.
கோகைன் பின்னணியில், இலங்கையை சேர்ந்த வர்கள் இருப்பதற்கான தகவல்கள் கிடைத்து உள்ளன. அவர்களும், தமிழ் திரையுலகத்தினரிடம் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு கூறினர்.






மேலும்
-
மடப்புரம் கோவில் காவலாளியை போலீஸ் தாக்கும் வீடியோ வெளியானது!
-
திருமணமான 4வது நாளில் பெண் தற்கொலை; வரதட்சணை கொடுமை என புகார்
-
கோவையில் செம்மொழி பூங்கா பணிகள் தாமதம்: தமிழக அரசின் முதன்மை செயலர் நேரில் ஆய்வு
-
மேற்கு மண்டல தபால் துறையில் 9 இடங்களில் ஐ.டி.சி., மையம்
-
100 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு சாத்தியமாகும்: மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் நம்பிக்கை
-
சுற்றுலா பயணியிடம் லஞ்சம் வாங்கிய புகார் :எஸ்.எஸ்.ஐ., உட்பட இருவர் 'சஸ்பெண்ட்'