அரசு பஸ் வசதி கேட்டு மனு
சேலம், இடைப்பாடி அருகே, வெள்ளரி வெள்ளி புதுப்பட்டி கிராம மக்கள், கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
இடைப்பாடி வெள்ளரிவெள்ளி ஊராட்சி, புதுப்பட்டி கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமத்துக்கு அரசு பஸ் வசதி இல்லாததால், மாணவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் சிரமப்படுகின்றனர். இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பராமரிப்பின்றி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பூட்டி வைத்துள்ளனர்.
எங்கள் கிராமத்துக்கு இடைப்பாடி-கோனேரிப்பட்டி வழியில் சின்னமுத்துார், வெள்ளரிவெள்ளி, புதுப்பட்டி, காட்டூர் மற்றும் சிலுவம்பாளையம் பகுதிகளை இணைக்கும் வகையில் அரசு பஸ் சேவை ஏற்படுத்தி தருவதோடு, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்களை நியமித்து பயன்பாட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.A
மேலும்
-
மருத்துவ படிப்புகளுக்கு 72,943 பேர் விண்ணப்பம்
-
நடிகர்கள் கோகைன் 'நெட் ஒர்க்' என்.சி.பி., விசாரணை
-
5 ஆண்டுக்கு 800 மெகா வாட் மின்சாரம் வாங்க அனுமதி கேட்பு
-
வீடு உட்பட 2.83 கோடி நுகர்வோருக்கான கட்டண உயர்வை அரசே ஏற்கும்: அமைச்சர் வீடுகள் உள்ளிட்ட 2.83 கோடி நுகர்வோருக்கு இல்லை
-
கடல்வழி சுற்றுலா பயணியர் வருகை 10 லட்சமாக உயர்த்த அரசு இலக்கு
-
ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்