புதுச்சேரி பல்கலை.,யில்  தெற்கு பிராந்திய மாநாடு  ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கல்வியாளர்கள் பங்கேற்பு 

புதுச்சேரி : இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் தெற்கு பிராந்திய மாநாடு புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது.

புதுச்சேரி கிளை தலைவர் தனபால் வரவேற்றார். மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் சாருமதி நோக்கவுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மத்திய பணியாளர் மற்றும் பொது குறைகள் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பங்கேற்றார்.

புதுச்சேரி தலைமை செயலர் சரத் சவுகான், பல்கலைக்கழக துணை வேந்தர் பிரகாஷ்பாபு, இந்திய பொது நிர்வாக நிறுவன நிர்வாக இயக்குநர் சுரேந்திர நாத் திரிபாதி, பதிவாளர் அமிதாப் ரஞ்சன், பாலாஜி வித்யாபீத் டீன் அசோக்குமார் தாஸ் வாழ்த்தி பேசினர்.

விழாவில் சண்டிகர் ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன உதவி பேராசிரியர் கோபிநாத் எழுதிய இந்தியாவில் டிஜிட்டல் ஆளுகை-பொது சேவை விநியோகத்தை மாற்றுதல் என்ற புத்தகத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார். மேலும் புதுச்சேரி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி வல்லவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வழங்கி பாராட்டினார்.

மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரியை சேர்ந்த இந்திய பொது நிர்வாக நிறுவன பிரநிதிகள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், அரசு அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், பல்வேறு துறை தொழில் துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் 80க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன.

இணை செயலாளர் ஜெயவிஜன் நன்றி கூறினார்.

Advertisement