பா.ம.க., மாநில நிர்வாகி நியமனம்

கடலுார் : பா.ம.க., மாநில இளைஞர் சங்க துணைத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடலுார் அடுத்த குடிகாட்டைச் சேர்ந்தவர் வேல்முருகன். அவரை பா.ம.க., மாநில இளைஞர் சங்க துணைத் தலைவராக கட்சியின் நிறுவனத்தலைவர் ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். கடலுார், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி சட்டசபை தொகுதிக்கான மாநில நிர்வாகியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement