வானுார், கிளியனுார் ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 

வானுார் : வானுார் தொகுதிக்கு வருகை தரும் அ.தி.மு.க., பொதுச்செயலாளருக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பாக நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் வரும் 10, 11ம் தேதிகளில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் 11ம் தேதி வானுார் தொகுதிக்கு சுற்றுபயணம் மேற்கொள்ள இருப்பதை ஒட்டி, வானுார் மற்றும் கிளியனுார் ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது.

என்.பி.ஆர்., திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், பக்தவச்சலம், கோட்டக்குப்பம் நகர செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தனர்.

எம்.எல்.ஏ.,சக்ரபாணி தலைமை தாங்கி, சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பழனிசாமிக்கு வரவேற்பு அளிப்பது, மக்களை திரட்டுவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். ஒன்றிய துணை செயலாளர் கணேசன், ஐ.டி., பிரிவு மாவட்ட செயலாளர் கோகுல்ராஜ், மண்டல இணை செயலாளர் எழில்ராஜ், மாவட்ட ஜெ., பேரவை துணை செயலாளர் வெற்றிவேந்தன், அணி செயலாளர்கள் கார்த்திகேயன், வீரப்பன், குணசேகரன், ரமேஷ், அப்பாஸ் மந்திரி, ஆறுமுகம், பாலசுந்தரம், சாமிதுரை, காட்கில், ஜெகன், அய்யனார், சுமன், ரவி, மாலா, சிவரஞ்சினி, மாவட்ட பிரதிநிதிகள் பிரபு, அம்பேத்குமார், சித்ரா உமாபதி, கவுன்சிலர் பிரகாஷ், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் டில்லி, பாசறை மாவட்ட துணை செயலாளர் வினோத்குமார், இளைஞரணி துணை தலைவர் ராஜா, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் ஜெய்பீம், சங்கர், ராவுத்தன்குப்பம் சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement