குடிநீர் தட்டுப்பாடு கண்டித்து எருமனுாரில் சாலை மறியல்

விருத்தாசலம்: எருமனுாரில் குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.
விருத்தாசலம் அடுத்த எருமனுார் ஆதிதிராவிடர் குடியிருப்பில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் உப்பு கலந்து வருவதால் குடிக்கவும், சமையலுக்கும் பயன்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த பி.டி.ஓ., லட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் சந்துரு உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ஒரு வாரத்திற்குள் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில், மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மறியலின் போது,திடீரென பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் தண்ணீர் தெளித்து மீட்டனர். மறியல் போராட்டத்தால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் சிரமமடைந்தனர். விருத்தாசலம் - மங்கலம்பேட்டை கிராம சாலையில், 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.
மேலும்
-
'மாநகராட்சி வரி முறைகேடு தி.மு.க.,வின் விஞ்ஞான ஊழல்'
-
மாஜி அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு; 5 முறை கோர்ட் மாற்றம்
-
கோவையில் மரம் வெட்டிச் சாய்த்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்
-
கிறிஸ்தவ மத துண்டு பிரசுரங்கள் வழங்கி அரசு மருத்துவமனையில் அத்துமீறல்
-
லாக் அப் மரணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை: கேட்கிறார் த.வெ.க., தலைவர் விஜய்!
-
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 48 ஆயிரம் கன அடி நீர் திறப்பு