வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.58 குறைப்பு!

புதுடில்லி: வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.58 குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகள் போன்று சமையல் காஸ் சிலிண்டர் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. மாதம் தோறும் முதல் நாளில் இந்த விலைகள் நிர்ணயிக்கப்படுவது வழக்கம்.
அண்மைக்காலமாக காஸ் சிலிண்டர் விலை நிர்ணயத்தில் ஏற்ற, இறக்கங்கள் நிலவி வந்தன. இந் நிலையில், ஜூலை 1ம் தேதியான இன்று காஸ் சிலிண்டர் விலைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
அதன்படி, வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலையில் ரூ.58 குறைக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றன.
கடந்த மாதம் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு காஸ் சிலிண்டர் விலை சென்னையில் ரூ.1881 ஆக இருந்தது. தற்போது அதில் ரூ.58 குறைக்கப்பட்டு ரூ. 1822 என விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இல்லை. 14.2 எடை கொண்ட சிலிண்டர் ரூ.868.50 என்றே உள்ளது.

மேலும்
-
டிரெண்ட் மாறியதால் மக்களை வீடு, வீடாக சென்று சந்திக்க உள்ளோம்: அமைச்சர் துரைமுருகன்
-
மானியம் இல்லாவிட்டால் எலான் மஸ்க் தென்னாப்பிரிக்கா தான் செல்ல வேண்டும்: அதிபர் டிரம்ப் பதிலடி
-
விசாரணைக்கைதி மரணத்தில் உடனடி நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
மடப்புரம் கோவில் காவலாளியை போலீஸ் தாக்கும் வீடியோ வெளியானது!
-
திருமணமான 4வது நாளில் பெண் தற்கொலை; வரதட்சணை கொடுமை என புகார்
-
கோவையில் செம்மொழி பூங்கா பணிகள் தாமதம்: தமிழக அரசின் முதன்மை செயலர் நேரில் ஆய்வு