விரைவில் வர்த்தக ஒப்பந்தம்; டிரம்ப்- பிரதமர் மோடி இடையே வலுவான உறவு; அமெரிக்கா உறுதி

வாஷிங்டன்: ''அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்- பிரதமர் மோடி இடையே வலுவான உறவு உள்ளது. விரைவில் அமெரிக்கா- இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்படும்'' என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இது குறித்து, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: ஆசிய பசிபிக் பகுதியில் இந்தியா மிகவும் நட்பு நாடாக திகழ்ந்து வருகிறது. வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நிறைவடையும் தருவாயில் இருக்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்- பிரதமர் மோடி இடையே வலுவான உறவு உள்ளது.
பிரதமர் மோடி உடன் அதிபர் டிரம்ப் கொண்டிருக்கும் உறவு தொடர்ந்து நீடிக்கும். விரைவில் அமெரிக்கா- இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்படும். அதிபர் டிரம்ப் மற்றும் வர்த்தக குழு ஒப்பந்தத்தை இறுதி செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார். சமீப காலமாக, இந்தியாவுடனான பணிகளில் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து, அதிபர் டிரம்ப் பலமுறை சூசகமாக குறிப்பிட்டு பேசி வருகிறார்.
''இந்தியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளோம்'' என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இந்தியா- அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது குறித்து ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது என வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.




மேலும்
-
மடப்புரம் கோவில் காவலாளியை போலீஸ் தாக்கும் வீடியோ வெளியானது!
-
திருமணமான 4வது நாளில் பெண் தற்கொலை; வரதட்சணை கொடுமை என புகார்
-
கோவையில் செம்மொழி பூங்கா பணிகள் தாமதம்: தமிழக அரசின் முதன்மை செயலர் நேரில் ஆய்வு
-
மேற்கு மண்டல தபால் துறையில் 9 இடங்களில் ஐ.டி.சி., மையம்
-
100 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு சாத்தியமாகும்: மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் நம்பிக்கை
-
சுற்றுலா பயணியிடம் லஞ்சம் வாங்கிய புகார் :எஸ்.எஸ்.ஐ., உட்பட இருவர் 'சஸ்பெண்ட்'