சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் உயிரிழப்பு

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்னகாமன் பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று (ஜூலை 01) தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 அறைகள் தரைமட்டமாகின.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மருத்துவமனை முன்பு குவிந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
வாசகர் கருத்து (5)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
01 ஜூலை,2025 - 12:14 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
01 ஜூலை,2025 - 11:59 Report Abuse

0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
01 ஜூலை,2025 - 10:57 Report Abuse

0
0
Reply
veeramani - karaikudi,இந்தியா
01 ஜூலை,2025 - 10:28 Report Abuse

0
0
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
01 ஜூலை,2025 - 12:41Report Abuse

0
0
Reply
மேலும்
-
விசாரணைக்கைதி மரணத்தில் உடனடி நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
மடப்புரம் கோவில் காவலாளியை போலீஸ் தாக்கும் வீடியோ வெளியானது!
-
திருமணமான 4வது நாளில் பெண் தற்கொலை; வரதட்சணை கொடுமை என புகார்
-
கோவையில் செம்மொழி பூங்கா பணிகள் தாமதம்: தமிழக அரசின் முதன்மை செயலர் நேரில் ஆய்வு
-
மேற்கு மண்டல தபால் துறையில் 9 இடங்களில் ஐ.டி.சி., மையம்
-
100 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு சாத்தியமாகும்: மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் நம்பிக்கை
Advertisement
Advertisement