பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: 4.96 கோடி பேர் ஆவணங்கள் சமர்ப்பிக்க தேவையில்லை

புதுடில்லி: பீகாரில் உள்ள 4.96 கோடி வாக்காளர்கள் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க தேவையில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பீகார் சட்டசபை தேர்தலுக்கு 3 மாதங்கள் முன்பு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து காங்கிரஸ்,ஆர்ஜேடி, இடதுசாரிகள் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் தொடர்ந்து கேள்விகள் எழுப்பியது. சிறப்பு திருத்தத்தை கைவிட வேண்டும் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந் நிலையில் 4.96 கோடி வாக்காளர்களின் விவரங்களைக் கொண்ட பட்டியலை, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலை தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இவர்கள் அனைவரும் தற்போது நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது எந்த புதிய ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டியது இல்லை.
அதாவது, பீகாரில் உள்ள மொத்த வாக்காளர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டியது இல்லை. 2003ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் (ஜனவரி 1, 2003 நிலவரப்படி) இருந்தால் வாக்காளர்கள் தானாகவே ஓட்டளிக்க தகுத பெறுவீர்கள் என்று தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
இந்த வாக்காளர்களின் வாரிசுகள், தங்கள் பெற்றோருக்கு ஆதாரங்களை சமர்ப்பிக்க தேவையில்லை. புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் பெயர் சேர்க்க, தங்கள் சொந்த அடையாள அட்டை மற்றும் முழுமையாக நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தை மட்டுமே அளிக்க வேண்டும்.
ஜூன் 24, 2025 அன்று வெளியிடப்பட்ட தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி 2003 வாக்காளர் பட்டியல் தற்போது வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளிடம் கிடைக்கிறது. ஆன்லைனில் அணுகியும் பெறலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த பட்டியலை தகுதிக்கான ஆவணமாக பயன்படுத்தலாம்.
இந்த பட்டியலில் பெயர் இல்லை என்றால், அதே பட்டியலில் இடம்பெற்று இருக்கும் உங்கள் பெற்றோர் பெயர்களை சொந்த ஆவணங்களுடன் சேர்த்து ஆதாரமாக பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
மேலும்
-
நடுவானில் பீதியை கிளப்பிய ஏர் இந்தியா விமானம்: பயணிகள் அச்சம்
-
கருத்து சுதந்திரம் இல்லையா: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
-
பயங்கரவாத அமைப்புகளை இந்தியா இனி விட்டு வைக்காது; ஜெய்சங்கர் எச்சரிக்கை
-
டிரெண்ட் மாறியதால் மக்களை வீடு, வீடாக சென்று சந்திக்க உள்ளோம்: அமைச்சர் துரைமுருகன்
-
மானியம் இல்லாவிட்டால் எலான் மஸ்க் தென்னாப்பிரிக்கா தான் செல்ல வேண்டும்: அதிபர் டிரம்ப் பதிலடி
-
விசாரணைக்கைதி மரணத்தில் உடனடி நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் பேட்டி