10வது ஆண்டில் டிஜிட்டல் இந்தியா; வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என பிரதமர் மோடி பெருமிதம்

6

புதுடில்லி: டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில், இந்நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறி உள்ளார்.



கடந்த 2015ம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 1) டிஜிட்டல் இந்தியா திட்டம் துவங்கப்பட்டது. பிரதமர் மோடியால் துவங்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்தின் நோக்கம் என்பது, நாட்டை டிஜிட்டல் துறையில் ஆற்றல் மிக்க ஒன்றாகவும், அறிவுசார் சமூகமாகவும் மாற்ற வேண்டும் என்பதே ஆகும்.


10 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து, இந்த நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறி உள்ளார். இதுகுறித்து அவர் கூறி உள்ளதாவது;

நாம் கொண்டாடும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நமது நாட்டை டிஜிட்டல் ரீதியாக அதிகாரம் பெற்ற மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய சமூகமாக மாற்றுவதற்கான ஒரு முயற்சியாக டிஜிட்டல் இந்தியா தொடங்கியது.


ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, எண்ணற்ற உயிர்களைத் தொட்டு, அதிகாரமளித்தலின் புதிய சகாப்தத்திற்கு வழிவகுத்த ஒரு பயணத்திற்கு நாம் சாட்சியாக நிற்கிறோம்.


140 கோடி இந்தியர்களின் கூட்டு உறுதியால் இயக்கப்படும் டிஜிட்டல் கட்டணங்களில் இந்தியா பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளும் இந்த முயற்சியால் பயனடைந்துள்ளன.


இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார்.

Advertisement