கோவில் காவலாளி மரணம்: மதுரை மாவட்ட நீதிபதி விசாரிக்க உத்தரவு

மதுரை: மடப்புரம் கோவில் காவலாளி கொல்லப்பட்ட வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி விசாரிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மரணமடைந்தது தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.வழக்கு விசாரணையை சி.பி.ஐ .விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அப்போது, அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. அதனை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஷ்குமார் தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது. இதற்கு காரணமான உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். முதல் தகவல் அறிக்கை பதியாமல் சிறப்பு படை எப்படி வழக்கை கையில் எடுத்தது. குறைந்தபட்சம் ஒரு மூத்த அதிகாரியைாவது அக்குழு கொண்டிருக்க வேண்டும்.
அஜித்குமார் உடலில் எந்த பாகங்கள் விடுபடாமல் அத்தனை இடங்களிலும் காயம் உள்ளது. அதிகாரமே இத்தகைய மனநிலையை போலீசாருக்கு தந்துள்ளது. இந்த தாக்குதல் நிகழ்வை இயக்கியது யார்? அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வு நடக்கக்கூடாது.
சாதாரண கொலை வழக்கு போல் இல்லை. அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளார். 44 காயங்கள் உள்ளது.அஜித்குமார் கொல்லப்பட்ட விவகாரத்தில் அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை. உயர் அதிகாரிகளை பாதுகாக்கும் வகையில் அரசின் நடவடிக்கை உள்ளது.5 பேர் மட்டுமே வழக்கில் சேர்ப்பு என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வருங்காலங்களில் போலீசார் இது போன்று யாரும் நடக்கக்கூடாது. கல்வியறிவு அதிகம் உள்ள தமிழகம் போன்ற மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் ஆபத்தானது.
சோசாலயில் வைத்து கடுமையாக தக்கி உள்ளனர். முகத்திலும் பிறப்புறுப்பிலும் மிளகாய் பொடி தூவி தாக்கி உள்ளனர். மே-28 வரை அஜித்குமார் அளித்த வழக்கை பதிவு செய்யப்படவில்லை.
3 தி.மு.க., நிர்வாகிகள், டி.எஸ்.பி., சேர்ந்து பேரம் பேசி உள்ளனர். ரூ.50 லட்சம், அஜித்குமார் தம்பிக்கு கோவிலில் பணி என பேரம் பேசி உள்ளனர். சட்டவிரோதமாக உயர் அதிகாரிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு இந்த வழக்கை உணர்வுப்பூர்வமாக எடுத்து சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்ற வேண்டும்.சில சாட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன. அரசு நியாயமாக விசாரிக்க வேண்டும்.உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வழக்கை மதுரை நான்காவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்க வேண்டும். ஜூலை 8ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவரிடம் ஆவணங்களை போலீசார் ஒப்படைக்க வேண்டும். சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஆவணங்களையும் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பாதுகாக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அறிக்கையாக தாக்கல் செய்கிறோம். நீதிமன்றத்துக்கு திருப்தி அளிக்கும் வகையில் நிச்சயம் அறிக்கை இருக்கும். அனைத்து அரசு உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது. அறிக்கை தாக்கல் செய்ய இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டும். பல புகார்கள் வருகின்றன அவை பெரிதுபடுத்தப்படுகின்றன. இந்த விஷயத்தில் அரசு நேர்மையாக உள்ளது. யாருக்கும் ஆதரவாக இல்லை என்றார்.
@block_B@
@block_B@மறக்க முடியாதது block_B வழக்கை எதிர்க்கட்சிகள் அரசியலாக்க முயற்சி செய்கின்றனர் எனஅரசு தரப்பு குற்றச்சாட்டு இதற்கு பதிலளித்த நதிதிகள் நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் இதனையே செய்வீர்கள் என பதிலளித்தார்.சாத்தான்குளம் ஜெபராஜ் பென்னிக்ஸ் வழக்கை யாரும் மறக்க முடியாது எனவும் தெரிவித்தார்.block_B
@block_Y@
@block_Y@சி.பி.ஐ., விசாரணைblock_Y வழக்கை சிபிஐ.,க்கு மாற்றுவது குறித்து அரசிடம் கேட்டு சொல்ல முடியுமா என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு தமிழக அரசு வழக்கறிஞர் சிபிஐ.,க்கு மாற்ற எந்த ஆட்சேபனை இல்லை என்றார்.block_Y
@block_P@
அஜித்குமார் தாக்கப்படும் போது கோவிலின் பின்புறம் உள்ள கழிவறையில் இருந்து வீடியோ எடுத்தேன்.சிறிது நேரத்திற்கு பயம் வந்துவிட்டதால் கழிவறையில் இருந்து வெளியே வந்துவிட்டேன் எனக்கூறினார்.block_P
@block_G@
இந்த வழக்கில் கோயில் சிசிடிவி எங்கே?சம்பந்தப்பட்ட இடத்தில் சாட்சியங்களை சேகரித்தது யார்
அங்கு ரத்தக்கறைகள், சிறுநீர் அடையாளங்கள் உள்ளதா? என கேட்டார்.
அங்கு ரத்தக்கறை இல்லை என அரசு தரப்பில் பதில் அளித்தார்.
சாட்சியங்களை சேகரிக்காமல் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என கேள்விஎழுப்பிய நீதிமன்றம், வழக்கின் சாட்சியங்கள் அனைத்தையும் அழிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். சிசிடிவி காட்சிகள் எடுத்ததாக போலீஸ் அறிக்கையில் இல்லை. இதை வைத்து குற்றவாளிகளை விடுவித்து விடுவீர்கள் தானே என நீதிபதிகள் தெரிவித்தனர். block_G




மேலும்
-
பதிலடி கொடுக்குமா இந்தியா * இரண்டாவது டெஸ்ட் ஆரம்பம்
-
பைனலில் திருப்பூர் அணி * அரைசதம் விளாசினார் சாத்விக்
-
விளாசல் ஆட்டம் தொடரும் * ஹாரி புரூக் உறுதி
-
சின்னர், ரடுகானு அபாரம் * விம்பிள்டன் டென்னில் முன்னேற்றம்
-
மான்செஸ்டர் சிட்டி 'ஷாக்' * கிளப் உலக கால்பந்தில் ஏமாற்றம்
-
ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-3' * 'டி-20' பேட்டர் தரவரிசையில்...