கார் - பைக் மோதல் ஒருவர் பலி: இருவர் படுகாயம்

அன்னுார்:
பைக் மீது கார் மோதிய விபத்தில், ஒருவர் இறந்தார். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆம்போதியைச் சேர்ந்த கிட்டான் மகன் பூபதி, 40. டிரைவர். இவரது நண்பர்கள் கணேசன், 33. குமார், மூவரும் மோட்டார் பைக்கில் நேற்று முன்தினம் மாலை, நீலிபாளையத்திலிருந்து ஆம்போதிக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வந்த கார் பைக் மீது மோதியது. இதில் பைக் ஓட்டிச் சென்ற பூபதி, கணேசன் மற்றும் கார் ஓட்டி வந்த மூர்த்தி, 29. ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதில் பூபதி சிகிச்சை பலனில்லாமல் நேற்று இறந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அன்னுார் போலீசார் கார் ஓட்டுனர் மீது, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement