திருமண ஆசை காட்டி பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

கோவை:
திருப்பூர், பல்லடம் ரோடு, அருள்புரம் பகுதியை சேர்ந்தவர் கலையரசன்,27; தொழிலாளியான இவர், பொள்ளாச்சி பகுதிக்கு வேலைக்கு சென்ற போது, வீட்டில் தனியாக இருந்த, 16 வயது சிறுமியுடன் நெருங்கி பழகினார்.

அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக, ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதுதொடர்பாக, 2023, ஜன., 31 ல் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பொள்ளாச்சி அனைத்து மகளிர்போலீசார் கலையரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர் மீது, கோவை முதன்மை போக்சோ கோர்ட்டில், விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி பகவதியம்மாள், குற்றம் சாட்டப்பட்ட கலையரசனுக்கு, 20 ஆண்டு சிறை, 16,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது.

Advertisement