அதிகாரிகள் மீது தாக்குதல்: ஹிமாச்சல் அமைச்சர் மீது வழக்கு பதிவு

சிம்லா:சாலை பணிகள் தாமதமாக இருப்பதாக கூறி, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளை தாக்கிய மாநில பஞ்சாயத்துராஜ் அமைச்சர் அனிருத் சிங் ரானா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று சிம்லாவில் நடக்கும் சாலை பணிகள் குறித்து நேரில் பார்வையிட வந்த அமைச்சர் அனிருத் சிங் ரானா மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஏன் பணிகள் தாமதமாக நடக்கிறது என்று அதிகாரிகளை மிரட்டி, தாக்குதல் நடத்தினர். இதில் தொழில்நுட்ப பிரிவு மேலாளராக உள்ள அச்சல் ஜிண்டால் பலத்த காயமடைந்தார். அதை தொடர்ந்து அவர், சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, அச்சல் ஜிண்டால், போலீசில் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து அமைச்சர் அனிருத் சிங் ரானா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது மிரட்டல் மற்றும் அரசு அதிகாரிகளை தடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு மாநில பா.ஜ., தரப்பில் கண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
தேர்தல் வருவதால் சி.பி.ஐ., விசாரணை: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
அமெரிக்காவில் ஹிந்து கோவிலில் துப்பாக்கிச்சூடு: குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க இந்திய தூதரகம் வலியுறுத்தல்
-
வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
-
தொழிற்சாலை பாதுகாப்பு சட்டங்கள் கடுமையாக்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்
-
பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டது அராஜகத்தின் உச்சம்: நயினார் நாகேந்திரன்
-
முதல்வரின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம்: இ.பி.எஸ்.,