டாக்சி ஓட்டுநரை தாக்கிய மூவர் மீது வழக்கு  

வானூர், : ஆரோவில் பகுதியில் 'டாக்சி' ஓட்டுநரை தாக்கிய, 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

புதுச்சேரி, முத்தியால்பேட்டை, சோலை நகர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன், 30; டாக்சி ஓட்டுநர்.

நேற்று முன்தினம் இவர் 'ஓலா' மூலம் புக் செய்த பயணிகளை தனது டாக்சியில் ஏற்றிக்கொண்டு ஆரோவில் பகுதிக்கு சென்றார். அங்கு அவர்களை இறக்கி விட்டு, மீண்டும் வாகனத்தை எடுத்தார்.

அப்போது, அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர்கள் 3 பேர், மணிகண்டனிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கினர்.

இதில் காயமடைந்த மணிகண்டன், ஆரோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுநர்களை தேடி வருகின்றனர்.

Advertisement