அதிகாரி மீது தாக்குதல் ஆதாரமற்றது: ஹிமாச்சல் அமைச்சர் மறுப்பு

சிம்லா: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூத்த அதிகாரி தாக்கப்பட்டதாக கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்றது என்று ஹிமாச்சல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் அனிருத் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சிம்லாவில் அதிகாரி தாக்குதல் தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் அனிருத் சிங் கூறியதாவது:
சம்பவம் நடந்தாக கூறப்படும் இடத்தில் சுமார் 150 பேர் அங்கு இருந்தனர். உள்ளூர்வாசிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளின் தவறான நடத்தைக்காக அவர்கள் மீது போலீசில் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். என் மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் ஆதாரமற்றது. அதில் எந்த உண்மையும் இல்லை. அனைத்து குற்றச்சாட்டுகளையும் நான் மறுக்கிறேன்.
கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் ஒரு பெரிய பிரச்சினையாக மாறப்போவதை அறிந்த தேசிய நெஞ்சாலை ஆணைய அதிகாரிகள், அதை மறைக்க வேண்டும் என்பதற்காக, என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள்.
தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் அந்த அதிகாரி மருத்துவமனையில் எவ்வளவு காலம் இருந்தார் என்பதற்கான பதிவை நீங்கள் கேட்க வேண்டும்.அங்குள்ள உள்ளூர்வாசிகளிடமிருந்து நீங்கள் வாக்குமூலங்களை கேட்டு பெறுங்கள். விசாரணையின் முடிவுகளை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அனிருத் சிங் கூறினார்.
மேலும்
-
தி.மு.க., எதிர்க்கட்சியாவதே நல்லது
-
'காவலர்களுக்கு வார விடுமுறை; முதல்வரிடம் எடுத்து கூறுவேன்'
-
சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு தடை உயர் நீதிமன்றம் தடை
-
காவிரியில் மூழ்கி 4 மாணவிகள் பலி; இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
-
மேற்கு தொடர்ச்சி மலையில் பெல்கல் தீர்த்த நீர்வீழ்ச்சி
-
ஹென்னுார் மூங்கில் காட்டில் சைக்கிள் பயணம்