தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்பது அத்துமீறல்: சென்னை ஐகோர்ட்

12

சென்னை: குற்றச்செயல்களை கண்டறிவதற்காக தனி நபரின் உரையாடலை ஒட்டுக் கேட்பதை அனுமதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.


சி.பி.ஐ., பதிவு செய்த வழக்கு தொடர்பாக கிஷோர் என்பவரது தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்க மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், குற்றங்களை கண்டுபிடிக்க ஒருவரது தொலைபேசி உரையாடலை ரகசியமாக ஒட்டுக் கேட்பதை அனுமதிக்க முடியாது.


தனி நபரின் உரையாடல்களை ஒட்டு கேட்பது அந்தரங்க உரிமைக்கு எதிரானது. பொது நலன் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டுமே ஒட்டு கேட்க முடியும். தனிநபரின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்பது அத்துமீறல்' எனக்கூறி அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Advertisement