ஓரணியில் தமிழ்நாடு விளக்க பொதுக்கூட்டம்: அமைச்சர் அழைப்பு

சிறுபாக்கம் : திட்டக்குடியில் நடக்கும் ஓரணியில் தமிழ்நாடு விளக்க பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:

முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உத்தரவின்படி, தி.மு.க.,வின் ஓரணியில் தமிழ்நாடு விளக்க பொதுக்கூட்டம் இன்று 2ம் தேதி மாலை 5:00 மணியளவில் திட்டக்குடி, கலைஞர் திடலில் நடக்கிறது. தி.மு.க., பேச்சாளர் சைதை சாதிக் பேசுகிறார்.

தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் இன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி என அனைத்து அணி நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement