பழங்குடி மக்களுக்கு சிறப்பு முகாம்

மதுரை: மதுரையில் அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடி மக்கள் மேம்பாடு அடையும் வகையில் முகாம்கள் நடக்கின்றன.

பழங்குடி மக்களுக்கான மத்திய அரசின் திட்டங்களான தர்தி ஆபா ஜன்ஜதி கிராம் உத்கர்ஷ் அபியான், பிரதான் மந்திரி ஜன்ஜதி ஆதிவாசி நியாய மஹா அபியான் மூலம் அவர்கள் வசிக்கும் இடங்களிலே முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று உசிலம்பட்டி குறிஞ்சி நகரிலும், நாளை காலை பேரையூர் மொக்கத்தான் பாறை, மாலை அழகம்மாள்புரம், ஜூலை 4ல் மேலூர் வளையபட்டி, ஜூலை 5ல் துவரிமான், ஜூலை 6 ல் குலமங்கலம், ஜூலை 7ல் வாடிப்பட்டி கோட்டைமேடு, மன்னாடிமங்கலத்தில் இம்முகாம்கள் நடக்கின்றன.

பழங்குடியின மக்கள் பங்கேற்று ஆதார் கார்டு, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களுக்கான அடையாள அட்டைகள், ஜாதி, குடியிருப்பு சான்றிதழ், முதியோர் ஓய்வூதியம், விதவை, ஊனமுற்றோர் உதவித்தொகை, கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்து பெறலாம்.

Advertisement