ஆதரவு எம்.எல்.ஏ.,வுக்கு சிவகுமார் நோட்டீஸ்

பெங்களூரு : 'இன்னும் மூன்று மாதங்களில் சிவகுமார் முதல்வர் ஆவார்' என கூறிய, காங்கிரஸ் எம்.எல்.ஏ., இக்பால் ஹுசைனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ராம்நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., இக்பால் ஹுசைன். இவர், துணை முதல்வர் சிவகுமாரின் தீவிர ஆதரவாளர். 'இன்னும் மூன்று மாதங்களில் சிவகுமார் முதல்வர் ஆவார். முதல்வர் பதவிக்கு போடப்பட்ட ஒப்பந்தம் சோனியா, ராகுல் முன்னிலையில் ஒப்பந்தம் போடப்பட்டது' என கூறி, காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

'முதல்வர் பதவி பற்றி பகிரங்கமாக பேசிய இக்பால் ஹுசைனுக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்' என, துணை முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சிவகுமார் நேற்று மதியம் கூறினார். நேற்று இரவு இக்பால் ஹுசைனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 'இது எல்லாம் வெறும் நாடகம்' என, சித்தராமையாவின் ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Advertisement