துவக்கப்பள்ளி அருகே குப்பையால் சுகாதாரக்கேடு

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. மஞ்சாளாறு பகுதி, ராசிமலை பழங்குடியினர் பகுதியைச் சேர்ந்த 80 க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
3 ஆசிரியர்கள் உள்ளனர். இப் பகுதி தேவதானப்பட்டி பேரூராட்சி 5 வது வார்டில் உள்ளது. பள்ளி சுவரில் 'சுற்றுப்புறத் தூய்மை எப்போதும் மேன்மை' என எழுதப்பட்டுள்ளதற்கு எதிராக குப்பை அகற்றப்படாமல் தேங்கியுள்ளது. தற்போது காற்று காலம் என்பதால் குப்பை பறந்து பள்ளி வளாகத்தில் விழுகிறது. ஆசிரியர்கள், மாணவர்கள் சங்கடப்படுகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் குப்பை அகற்றி, வேறு பகுதியில் குப்பை தொட்டி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரியுள்ளனர்.-
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதிய தலாய்லாமாவை தேர்வு செய்ய எங்கள் அனுமதி வேண்டும்: சொல்கிறது சீனா
-
தொடர் தோல்வி எதிரொலி:இந்திய கால்பந்து தலைமை பயிற்சியாளர் மனோலோ மார்க்வெஸ் பதவி விலகல்
-
துப்பாக்கியை காட்டி சுட்டுவிடுவேன் என மிரட்டி இருக்கிறார்கள்; போலீசார் குறித்து திருமாவளவன் "திடுக்"
-
அரிசி இறக்குமதி விவகாரம்: ஜப்பானை விமர்சித்த டிரம்ப்
-
தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்பது அத்துமீறல்: சென்னை ஐகோர்ட்
-
ஈரானின் அடுத்தகட்ட நடவடிக்கை; சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பு இடைநிறுத்தம்!
Advertisement
Advertisement