சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் :பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
துணை சுகாதார மையங்களில் ஒப்பந்த செவிலியர்களை பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுத்தக்கூடாது.
கொரோனா பணிகளில் ஈடுபட சுகாதார செவிலியர்கள் மறுத்ததால் ஒப்பந்த செவிலியர்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது என பேசிய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடுமையான கண்டனம், காலியாக உள்ள 4 ஆயிரம் செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பிரசவத்தின்போது இறப்புகள் ஏற்பட்டால் செவிலியர்கள் மீது பழி சுமத்துவதை தடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரோணிக்கம் தலைமை வகித்தார்.
செயலாளர் ஜோஸ்பின் அமலா முன்னிலை வகித்தார். பொருளாளர் போதும்பொண்ணு வரவேற்றார். ஏராளமான செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
மேலும்
-
புதிய தலாய்லாமாவை தேர்வு செய்ய எங்கள் அனுமதி வேண்டும்: சொல்கிறது சீனா
-
தொடர் தோல்வி எதிரொலி:இந்திய கால்பந்து தலைமை பயிற்சியாளர் மனோலோ மார்க்வெஸ் பதவி விலகல்
-
துப்பாக்கியை காட்டி சுட்டுவிடுவேன் என மிரட்டி இருக்கிறார்கள்; போலீசார் குறித்து திருமாவளவன் "திடுக்"
-
அரிசி இறக்குமதி விவகாரம்: ஜப்பானை விமர்சித்த டிரம்ப்
-
தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்பது அத்துமீறல்: சென்னை ஐகோர்ட்
-
ஈரானின் அடுத்தகட்ட நடவடிக்கை; சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பு இடைநிறுத்தம்!