தி.மு.க., வெற்றிக்கு ம.தி.மு.க., அவசியம்

2

கட்சிக்கு அங்கீகாரம் வேண்டுமானால், குறைந்தது எட்டு சட்டசபை உறுப்பினர்கள், ஒரே சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்த அடிப்படையில் தான், 12 தொகுதிகள், தி.மு.க., கூட்டணியில் கேட்கப்பட வேண்டும் என ம.தி.மு.க., முதன்மைச் செயலர் துரை வைகோ கூறியிருந்தார். ஒரு விஷயத்தை அனைவரும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

தி.மு.க.,வுடன் ம.தி.மு.க., கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்ட 2019, 2021, 2024 தேர்தல்களில் தி.மு.க., கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. ஆனால், கூட்டணி வைக்காத 2011, 2014 தேர்தலில் தி.மு.க., கூட்டணி தோல்வியை தழுவியிருக்கிறது. ஆக, தி.மு.க., கூட்டணிக்கு ம.தி.மு.க., எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

- அர்ஜுன ராஜ்,

அவைத்தலைவர், ம.தி.மு.க.,

Advertisement