கானா சென்றடைந்தார் பிரதமர் மோடி: விமான நிலையத்தில் வரவேற்றார் அதிபர்

அக்காரா: அரசு முறை பயணமாக பிரதமர் மோடி கானா நாட்டிற்கு சென்றடைந்தார். விமான நிலையம் வந்த அந்நாட்டு அதிபர் மஹாமா வரவேற்றார்.
கானா,டிரினிடாட் டுபாக்கோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்று பயணம் மேற்கொள்கிறார்.முதற்கட்டமாக ஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றார். அக்காராவில் விமான நிலையத்திற்கு வந்த அந்நாட்டு அதிபர் மஹாமா பிரதமர் மோடியை வரவேற்று அழைத்து சென்றார். அங்கு மோடியை கவுரவிக்கும் வகையில் 21 குண்டுகள் முழக்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
கடந்த 3 தசாப்தத்தில் கானா நாட்டிற்கு செல்லும் முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ள பிரதமர் மோடியை பார்க்க, அங்கு வசிக்கும் இந்தியர்கள் ஒன்று கூடினர். மோடியின் பெயரை உற்சாகமாக கோஷம் போட்டு வரவேற்றனர். அவர்களை நோக்கி கையசைத்து அவர்களின் வரவேற்பை மோடி ஏற்றுக் கொண்டார். ' ஹரே கிருஷ்ணா ' பாடலை பாடியும் வரவேற்றனர்.














மேலும்
-
தொடர்ந்து உயரும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,520 அதிகரிப்பு
-
குடைவரை கோயில் ... குமரனின் குன்றம்...குதூகலமாய் தயாராகுது
-
உத்தரகண்டில் கடும் நிலச்சரிவு: யாத்ரீகர்கள் 40 பேர் பத்திரமாக மீட்பு
-
கொஞ்சம் கூட தாமதிக்கக் கூடாது; ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா
-
பைக் மீது லாரி மோதி விபத்து; 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் பலி; உ.பி.,யில் சோகம்
-
மாஜி அமைச்சரின் பினாமி வீட்டில் பல கோடி ரூபாய் கொள்ளை; கணக்கில் காண்பித்ததோ ரூ.44 லட்சம்; டிரைவர் உட்பட 4 பேர் கைது!