மொத்த ஊழியர்களில் 4 சதவீதம் பேர் பணி நீக்கம்: மைக்ரோசாப்ட் அறிவிப்பு

3

வாஷிங்டன்: தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.



அமெரிக்காவின் பில் கேட்ஸ் மற்றும் பால் ஆலன் ஆகியோரால் 1975ம் ஆண்டு தொடங்கப்பட்ட பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், மென்பொருள், நுகர்வோர் மின்னணு பொருட்கள், தனிப்பட்ட கணினிகள் மற்றும் அது தொடர்பான சேவைகளை உருவாக்கி, விற்பனை செய்துவருகிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கை:

மாறி வரும் சந்தையில் வெற்றிபெற நிறுவனத்தையும், அதன் குழுக்களையும் சிறப்பாக நிலைநிறுத்த தேவையான மாற்றங்களின் அடிப்படையில், நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.

கடந்த ஜூன் மாதம் வரை எங்களது நிறுவனத்தில் 2,28,000 முழுநேர ஊழியர்களைப் பணியமர்த்தி உள்ளோம். அதிலிருந்து 4 சதவீதம் பேரை குறைக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி பார்த்தால் 9 ஆயிரம் பேர் வரை நீக்கப்படலாம். கடந்த மே மாதம் 6 ஆயிரம் பேர் வரை பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து தற்போது பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணி நீக்கம் அதன் விற்பனைப் பிரிவு மற்றும் அதன் எக்ஸ்பாக்ஸ் வீடியோ கேம் வணிகம் உட்பட உலகெங்கிலும் உள்ள பல குழுக்களை பாதிக்கும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement