செக் போஸ்ட்

எத்தனை சோதனைகள் நடத்தினாலும், பறிமுதல் செய்தாலும், மாதந்தோறும் சேர வேண்டிய 'மாமுல்' போய் சேருவதால் சட்டவிரோத காஸ் விற்பனையை யாராலுமே தடுக்க முடியல.

ஆயிரத்துக்கு மேற்பட்ட மூன்று சக்கர வாகனங்கள் காஸ் மூலம் தான் சாலைகளில் இயக்குறாங்க. ஆனால் 'காஸ்' விற்பனை செய்யும் பங்க்குகளில் 5 சதவீதம் வாகனங்கள் கூட பங்க்குகளில் காஸ் நிரப்புவதில்லன்னு, காஸ் பங்க் விற்பனையின் கணக்கு காட்டுது.

சட்ட விரோதமா, பாதுகாப்பற்ற காஸ் ரீ பில்லிங் வியாபாரத்தை தடுக்க வேண்டியவங்களே வசூல் வேட்டை நடத்துவதால் அவங்க பேர்ல சட்ட நடவடிக்கை பாய மறுக்குது.

சிட்டிக்குள் காஸ் சிலிண்டர் வெடிப்பது அவ்வப்போது நடந்திருக்குது. நுாற்றுக்கும் மேற்பட்ட சிலிண்டர்களை பறிமுதல் செய்தும் என்ன பிரயோஜனமோ?

வீடுகளின் சமையலுக்கு வழங்குற காஸ் சிலிண்டர்களை ஓட்டல்களுக்கு சர்வ சாதாரணமா விற்பனை செய்றதா தெரிந்தும், உணவுத் துறை பார்வை, இதன் மீது விழுவதில்லை.

முனிசி., நிர்வாகம், புதுசா ஒரே ஒரு லே - அவுட் உருவாக்கல. வணிக வளாகமும், புதுசா வாகன நிறுத்துமிடமும் ஏற்படுத்தல. கட்டப்பட்ட கழிப்பறைகளை கூட பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கல. மாட்டு வண்டி நிலையத்துக்காரங்க மறுவாழ்வுக்கு கட்டப்பட்ட வணிக வளாக கட்டடம் சிதைந்து சின்னா பின்னமா கிடக்குது. அதை கவனிப்பார் யாருமில்ல. இதனால் முனிசி.,க்கு வரி, வாடகை, வருமானமாகிலும் கிடைச்சிருக்கும்.

பஸ் நிலைய வணிக வளாகம் பல கோடி செலவழித்து கட்டப்பட்டதை டெண்டர் விடாமல் பூட்டி வெச்சிருக்காங்க. இது சமூக சீர்கேடுக்கு தான் பயன்படுது. இதுக்கு முனிசி., நிதியை வீணாக்கலாமா? சிட்டி மீது அக்கறை உள்ளவங்க ஏன் ஆக் ஷன் எடுக்க தயங்குறாங்களோ?

முனிசி.,க்கு சொந்தமான இடத்தில் நவீன கசாப்பு மையம் ஏற்படுத்துவதாக திட்டம் போட்டாங்க. பல லட்சம் ரூபாய் அரசும் நிதி கொடுத்ததாகவும் பெருமையா பேசினாங்க. ஆனால், அந்த நவீன கசாப்பு மையத்தை தேடினாலும் கிடைக்கலயே.

10 ஆண்டுகளில் ஒரு முறையாவது தற்போதுள்ள கசாப்பு நிலையத்தையோ, இறைச்சி கடைகளையோ சுகாதாரத்துறை ஆய்வு செய்திருப்பாங்களா?

சலவை செய்த ஆடைகளை வெயிலில் உலர்த்துவது போல இறைச்சிகள் தொங்குவதை தினமும் காணலாம். இதை சுகாதாரத் துறை கண்டிக்க தவறுவது ஏனோ?

டிரேட் லைசென்ஸ் கொடுப்பது மட்டுமே சுகாதார ஆபீசர்கள் வேலையா இருக்குதே தவிர, சுகாதாரத்தை காணலையே.

பட்டியலினத்துல 110 உட்பிரிவு இருக்குது என்பது அரசே அறிந்த உண்மை. இதோட கணக்கெடுப்பை அரசு ஒரு மாதமாக நடத்தினாங்க.

ஓட்டுக்கோ அல்லது சகல இட ஒதுக்கீடு சலுகைக்கோ எதிர்பார்க்குறவங்க தெரு பிரசாரம் செய்திருக்க வேண்டும். ஏதோ ஓரிரு நாள் நானும் பிரசாரத்தில் இருக்கிறேன்னு சுய விளம்பரத்தை தேடினாங்களே தவிர, சாதக பாதகம் பற்றி யாரும் சொல்லல.

பட்டியல் வகுப்பில் உள்ள கர்நாடக தமிழர்கள் 95 சதவீதம் ஆதி திராவிடர்கள் தான். ஆனால், இதை புரிய வைக்காமல் இன்னும் எதையோ சொல்லி ஜனங்கள குழப்புறாங்க.

அதைவிட, பட்டியல் ஜாதியில் இல்லாதவங்க எல்லாம் போலி சான்றிதழில் அதிகாரத் தில் இருக்காங்களே அவங்கள ரிசர்வ் பிரிவின் தலைவர்கள் ஏன் கண்டுக்கல. அவர்கள் சார்ந்துள்ள ஜாதி ஓட்டுகள் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சமா?

@block_B@

போலிகள் பட்டியல்

block_B

Advertisement