மகனுக்கு பைக் கொடுத்த தந்தைக்கு ஒரு நாள் 'ஜெயில்'
துமகூரு; சிறுவனுக்கு பைக்கை ஓட்ட கொடுத்த தந்தைக்கு ஒரு நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
துமகூரு மாவட்டத்தை சேர்ந்தவர் ரவிகுமார். இவர் கடந்த ஆண்டு நவம்பரில், 18 வயது பூர்த்தி ஆகாத தன் மகனுக்கு, பைக்கை ஓட்ட கொடுத்தார். அப்போது, அவரது மகன், பைக்கை கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். மைனர் சிறுவனுக்கு பைக்கை ஓட்ட கொடுத்ததற்காக தந்தை ரவிகுமார் மீது குப்பி போலீஸ் நிலையத்தில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு துமகூரு ஜுடீசியல் மாஜிஸ்திரேட் முதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனுபமா, தந்தை ரவிகுமாருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதமும். ஒரு நாள் சிறைத் தண்டனையும் விதித்தார். இதன்படி, ரவிகுமார் நேற்று முன்தினம் ஒரு நாள் சிறையில் அடைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார்.
இது வீட்டில் உள்ள சிறுவர்களுக்கு பைக்கை ஓட்ட கொடுக்கும் பெற்றோருக்கு எச்சரிக்கை மணியாக உள்ளது.
மேலும்
-
சிட்டுக்குருவியின் முழு மரபணு வரைபடம் தயார்
-
அறிவியல் துளிகள்
-
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் தேசிய விருது வழங்கி கவுரவிப்பு
-
சிந்தனையாளர் முத்துக்கள்!
-
4.54 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த... இலக்கு; 97 குழுக்கள் மூலம் சிறப்பு முகாம் துவக்கம்
-
ஜிப்மரில் 557 புதிய பணியிடங்கள்... உருவாக்கம்; மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி