அறிவியல் துளிகள்

1. நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சனிக் கோள் போன்ற பெரிய வாயுக் கோள் ஒன்றைக் கண்டறிந்துள்ளது. இது பூமியிலிருந்து 110 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. நமது சூரியனை விடச் சிறிய நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது.
Latest Tamil News
2. ஜுன் 25ஆம் தேதி அதிகாலையில் அமெரிக்காவின் தென் கிழக்கு மாகாணங்களில் பச்சை நிறத்தில் ஒளியை உமிழ்ந்தபடி ஒரு விண்கல் வானில் கடந்து சென்றது. 2 நொடிகள் மட்டுமே நீடித்த இந்தக் காட்சியை மக்கள் புகைப்படம், வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Latest Tamil News
3. சீனாவில் உள்ள 142 வௌவால் இனங்களை ஆராய்ந்து வந்த விஞ்ஞானிகள் அவற்றில் வாழும் 22 புதிய வைரஸ்களைக் கண்டறிந்துள்ளனர். இவை மனிதர்களிடையே பரவினால் மூளைக் கோளாறு, சுவாச மண்டல பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளனர்
Latest Tamil News
4. சிங்கப்பூர் விஞ்ஞானிகள் ஒரு புதிய வகை வெள்ளை பெயின்ட்டைக் கண்டுபிடித்துள்ளனர். இதை சுவரில் பூசியதும், நீர்த் துளிகளை வெளியேற்றும். மனித உடலை குளிர்விக்கும் வியர்வை போல், இந்த நீர்த்துளிகள் செயல்பட்டு, கட்டிடங்களை வெப்பமான சூழலிலும் குளிர்ச்சியாக வைக்கிறது.
Latest Tamil News
5. மறுசுழற்சியில் ஒரு திருப்பம். விஞ்ஞானிகள், இ.கோலி (E. coli) என்ற பாக்டீரியாவை வைத்து, பிளாஸ்டிக் கழிவுகளை, பாராசிட்டமால் மருந்தாக மாற்றும்படி செய்துள்ளனர். பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை சிதைத்து, பொதுவான வலி நிவாரணியாக மாற்றும் இந்த செயல்முறை, மருத்துவ விநியோகம் மற்றும் பிளாஸ்டிக் மாசுபாடு என இரண்டுக்கும் தீர்வு வழங்குகிறது.

Advertisement