ஆபரணத் தங்கம் 2 நாட்களில் ரூ. 1200 உயர்வு: விலையில் தொடரும் ஏறுமுகம்

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து உள்ளது. 2 நாட்களில் மட்டும் சவரன் ரூ.1200 அதிகரித்துள்ளது.



உலக நாடுகளில் காணப்படும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலை ஸ்திரமாக இல்லை. அவ்வப்போது அதிக ஏற்றம் அல்லது இறக்கத்துடன் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.


நேற்றைய தினம் சவரன் ரூ.840 அதிகரித்து, ரூ.72160 ஆக விற்பனையானது. கடந்த சில நாட்களாக விலை இறங்குமுகமாக இருந்த தருணத்தில் நேற்றைய விலையேற்றம் தங்க நகை வாங்குபவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.


இந் நிலையில், 2வது நாளாக இன்றும் ஆபரணத் தங்கம் விலை உச்சத்திற்கு சென்றுள்ளது. ஆபரணத் தங்கம் சவரன் ரூ. 360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,520 ஆக இருக்கிறது. ஒரு கிராம் ரூ.45 அதிகரித்து ரூ.9065 ஆக விற்கப்படுகிறது.


கடந்த 2 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1200 அதிகரித்துள்ளது, வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

Advertisement