பா.ம.க.,வில் இருந்து எம்.எல்.ஏ., அருள் நீக்கம்; அன்புமணி அறிவிப்பு

9


சென்னை: சேலம் மேற்கு பா.ம.க., எம்.எல்.ஏ., அருள் கட்சியின் கட்டுப்பட்டை மீறியதாகக் கூறி அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி அறிவித்தார்.


இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பா.ம.க., கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் அருள் செயல்பட்டு வருகிறார். அவர் பா.ம.க., தலைமை குறித்து முதன்மை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைக்கிறார்.

விளக்கம் கேட்டு 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க அறிவுறுத்தப்பட்டதை அருள் ஏற்கவில்லை. பா.ம.க., ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை அடிப்படையில் எம்.எல்.ஏ., அருள் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார். எம்.எல்.ஏ., அருளுடன் பா.ம.க.,வினர் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது. இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

Advertisement