தனியார் பள்ளி பஸ் மோதி கணவர் கண் முன் மனைவி பலி
அந்தியூர், அந்தியூர் அருகே, தனியார் பள்ளி பஸ் மோதி, கணவர் கண் முன் மனைவி உயிரிழந்தார். அந்தியூர் அருகே பருவாச்சி காந்தி நகரை சேர்ந்த பழனிசாமி மனைவி சாந்தி, 45, கூலி தொழிலாளி. நேற்று மாலை 6:30 மணிக்கு இருவரும், அந்தியூரிலிருந்து அத்தாணி கள்ளிப்பட்டிக்கு, டி.வி.எஸ்., 50 மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.
தாசாரியூர் காலனி அடுத்த பேக்கரி பேரிகார்டை கடந்து சென்றபோது, எதிரில் வந்த அந்தியூர் பவானி ரோட்டிலுள்ள தனியார் பள்ளி பஸ் மோதியது. இந்த விபத்தில், கீழே விழுந்த சாந்தி பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி கணவர் கண்முன்னே உயிரிழந்தார். லேசான காயத்துடன் பழனிசாமி உயிர் தப்பினார்.அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கணியூரில் 500 ஏக்கரில் பன்முக தளவாட பூங்கா; ! 'மாஸ்டர் பிளான்' அறிக்கையில் முன்மொழிவு
-
'கூகுள்' குட்டப்பாவுக்கு போட்டியாக பெர்ப்ளெக்சிட்டி' வந்தாச்சுப்பா!
-
நியமனம்
-
குழந்தை பெறும் பள்ளி மாணவியருக்கு உதவி தொகை அளிக்கிறது ரஷ்யா
-
தி.மு.க.,வின் மொழிப்போர் மகாராஷ்டிராவில் போராட்ட சூறாவளியாக சுழன்றடிக்கிறது முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
'ஸ்மார்ட் மீட்டர்' திட்டம் என்னாச்சு ரூ.160 கோடியில் 11.50 லட்சம் சாதா மீட்டர் வாங்குது வாரியம்
Advertisement
Advertisement