3 சவரன் திருட்டு போலீஸ் விசாரணை

விழுப்புரம் : விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம், வழுதரெட்டி, காந்தி நகரை சேர்ந்தவர் பூசமணி,64; ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர். இவர் கடந்த 29ம் தேதி இரவு 11:00 மணிக்கு தனது வீட்டில் குடும்பத்தோடு துாங்கினார்.

மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது, அவரது வீட்டின் அறையில் மேஜை மீது வைத்திருந்த கைப்பையில் இருந்த, 3 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது.

இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த பையை மர்ம நபர்கள், அருகேவுள்ள ஜன்னல் வழியாக திருடியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement