திருப்பதி கோவில் அருகே பயங்கர தீவிபத்து; கடைகள் எரிந்து நாசம்

திருமலை: திருப்பதியில் உள்ள கோவிந்தராஜூ சுவாமி கோவில் அருகே ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், அங்குள்ள கடைகள் எரிந்து நாசமாகின.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள வடக்கு மாட வீதியில் அமைந்துள்ளது ஸ்ரீ கோவிந்தராஜூ சுவாமி கோவில். திருமலையில் உள்ள மலையின் மீது அமைந்துள்ள திருப்பதி பாலாஜி கோவிலில் இருந்து 9 கி.மீ., தொலைவில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ கோவிந்தராஜூ கோவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இந்த நிலையில், இன்று அதிகாலை ஸ்ரீ கோவிந்தராஜூகோவில் அருகே திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கடைகளுக்கும் தீ பரவியது. இது குறித்து கோவில் நிர்வாகிகள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீவிபத்தில் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹேக் ஆனது மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் சமூக வலைதளம்
-
கார் விபத்தில் போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா பலி: திருமணமாகி 2 வாரத்தில் சோகம்!
-
அஜித்குமார் கொலை வழக்கு; வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு
-
போலீசாரை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது வெட்கக்கேடு; முதல்வரை கடுமையாக சாடிய சீமான்!
-
தேர்தல் முடிந்த பிறகு குழந்தைகளை போல் அழக்கூடாது: 'இண்டி' கூட்டணியை கிண்டல் செய்யும் ஓவைசி
-
அஜித் குமார் மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள் : தமிழக அரசுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி
Advertisement
Advertisement