தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடலுாரில் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலுார்: விவசாயிகளை வெளியேற்ற முயற்சிக்கும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடலுாரில் நேற்று நடந்தது.
கடலுார் ஊராட்சி ஒன்றியம், வெள்ளக்கரை ஊராட்சி, மலையடிக்குப்பம், வெ.பெத்தாங்குப்பம், கொடுக்கன்பாளையம், கீரப்பாளையம், காட்டாரச்சாவடி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 200 ஆண்டுகளாக அரசு தரிசு நிலத்தில் பயிர் செய்து வரும் விவசாயிகள் பொதுமக்களை, சட்ட விரோதமாக முந்திரி மரங்களை பறித்து எறிந்து விவசாயத்தை அழித்து வெளியேற்ற முயற்சிக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் தட்சணாமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ்கண்ணன் முன்னிலை வகித்தனர்.
எம்.எல்.ஏ., நாகைமாலி, மாநிலக்குழு ரமேஷ்பாபு, ரவிச்சந்திரன், சரவணன், ராமச்சந்திரன், அமர்நாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
ஹேக் ஆனது மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் சமூக வலைதளம்
-
கார் விபத்தில் போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா பலி: திருமணமாகி 2 வாரத்தில் சோகம்!
-
அஜித்குமார் கொலை வழக்கு; வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு
-
போலீசாரை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது வெட்கக்கேடு; முதல்வரை கடுமையாக சாடிய சீமான்!
-
தேர்தல் முடிந்த பிறகு குழந்தைகளை போல் அழக்கூடாது: 'இண்டி' கூட்டணியை கிண்டல் செய்யும் ஓவைசி
-
அஜித் குமார் மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள் : தமிழக அரசுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி