நத்தம் அருகே பா.ஜ., நிர்வாகி படுகொலை!

திண்டுக்கல்: நத்தம் சாணார்பட்டி அருகே, முன்னாள் பா.ஜ., மண்டல நிர்வாகி பாலகிருஷ்ணன் அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த ராஜாக்காபட்டியை சேர்ந்தவர் முன்னாள் பா.ஜ., மண்டல நிர்வாகி பாலகிருஷ்ணன், 39.ஆற்று மணல் விற்பனை, லாரி தொடர்பான தொழில்களை மேற்கொண்டு வருகிறார்.
இவர் இன்று இரவு சாணார்பட்டி அருகே வந்தபோது இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
இதில், அதே இடத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் மற்றும் டி.எஸ்.பி.,சிபி சாய் சவுந்தர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலகிருஷ்ணன் என்ன காரணத்தால் கொலை செய்யப்பட்டார், கொலையாளிகள் யார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை. சுற்றுவட்டார பகுதிகளில் சிசிடிவி காட்சிகளை போலீசார் சேகரித்து விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.










மேலும்
-
கடவுள் மறுப்பாளர் அண்ணாதுரை நினைவுநாளில் கோயில்களில் அன்னதானம் வழங்குவது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி
-
சிறப்பு படைகள் வரமா? சாபமா?
-
மதுரை, சிவகாசியில் நாளை தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நாளை மறுநாள் திண்டுக்கல், தேனியில்...
-
காவலாளி கொலையில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு?
-
'கூரியர் பாய்' போல் நுழைந்து அடுக்குமாடி குடியிருப்பில் பெண் பலாத்காரம்
-
ரூ.1 லட்சம் கோடி ராணுவ கொள்முதல்