சிறப்பு படைகள் வரமா? சாபமா?

கோவை: சிவகங்கை சம்பவத்தையடுத்து, போலீஸ் சிறப்பு படைகள் கலைக்கப்பட்டதால், வழக்குகள் தேங்கும் வாய்ப்புள்ளது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார், போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில், தனிப்படை போலீசார் தாக்கியதில் அஜித் குமார் உயிரிழந்தார்.
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகளின் கீழ் இயங்கும் தனிப்படைகளை கலைக்க டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்தார். மேலும், 'கம்புகளை தவிர்க்க வேண்டும், போராட்டம், ஆர்ப்பாட்டம் நடக்கும் இடங்களில் கம்புகளை பயன்படுத்தகூடாது, கட்டப்பஞ்சாயத்து கூடாது' போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்
கடந்த முறை சாத்தான்குளத்தில் தந்தை, மகன் போலீசாரால் கொல்லப்பட்டபோது, 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' சேர்ந்தவர்கள் தாக்கியது குறித்து சர்ச்சை எழுந்தது. அப்போது 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' திட்டத்தை நிறுத்த உத்தரவு பிறபிக்கப்பட்டு, அத்திட்டம் கைவிடப்பட்டது.
தற்போது, அஜித்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு தனிப்படை போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார் என அனைத்து சிறப்பு படைகளையும் கலைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது போலீசாரால் ஏற்படும் மரணங்களை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும். மாற்றாக சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் பணியாற்றும் பிரிவையே ரத்து செய்வது குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வழிவகுக்கும்.
தற்போது, தனிப்படைகள் கலைக்கப்பட்டுள்ளதால், ஸ்டேஷன்களில் உள்ள போலீசார் அன்றாட பணிகளுக்கு நடுவில் இது போன்ற தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு குற்றங்கள் வேரோடு அழிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
சிலர் செய்யும் தவறுகளுக்கு பல மாவட்டம், மாநகர்களில் குற்றச்செயல்களை தடுக்க பெரிதும் உதவியாக இருந்து வந்த தனிப்படைகளை கலைத்ததால், வழக்குகள் தேங்கும் வாய்ப்பு உள்ளதோடு, குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.
@block_B@
* கோவை மாநகர பகுதிகளில், கமிஷனர், துணை கமிஷனர்களின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வந்த தனிப்படையினர் சிறப்பாக குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து வந்தனர். மேலும், பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை, சட்ட விரோதமாக மது விற்பனை, போதைப்பொருட்கள் விற்பனை, செயின் பறிப்பு சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதனால் மாநகர பகுதிகளில் இது போன்ற குற்றச்சம்பவங்கள் குறைந்து வந்தன.* கஞ்சா, போதை மாத்திரை, மெத்தபெட்டமைன் போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்வதோடு விடாமல், அவர்களுக்கு வெளி மாநிலங்களில் இருந்து சப்ளை செய்யும் நபர்களையும் தேடிச் சென்று பிடித்து வந்தனர். * கடந்த 2024ம் ஆண்டு, செயின் பறிப்பில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகளை தனிப்படை போலீசார் மீட்டனர்.* மற்றொரு தனிப்படையினர் மாநகரில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட, வெளி மாநிலங்களில் இருந்து சப்ளை செய்த, 169 பேரை கைது செய்து, 161 கிலோ கஞ்சா, 77 கிராம் மெத்தபெட்டமைன், 4 டன் குட்கா பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளனர். போதைப்பொருட்கள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டதால், தனிப்படையில் இருந்த எஸ்.ஐ., ஒருவருக்கு முதல்வர் விருது அறிவிக்கப்பட்டது.block_B





மேலும்
-
இந்தியாவுக்கு எல்லை ஒன்று; எதிரிகள் 3 பேர்: ராணுவ துணை தளபதி
-
கர்நாடகாவில் ஓடும் ரயிலில் பயங்கர தீவிபத்து; லோகோ பைலட்டின் சாமர்த்தியத்தால் பெரும் சேதம் தவிர்ப்பு
-
முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு; த.வெ.க., செயற்குழுவில் அறிவிப்பு
-
நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி: போட்டோ வைரல்
-
பயணிகள் சேவையில் டாப் ; முதல் இடத்தில் 3 விமான நிலையங்கள்
-
பொன்முடியின் ஆபாச பேச்சு; விசாரணைக்கு போலீசார் தயங்கினால் சி.பி.ஐ.,க்கு மாற்றப்படும்; ஐகோர்ட் எச்சரிக்கை