சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை உத்சவம் விமரிசை

குன்றத்துார், ஜூலை 4--
சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், நேற்று கருட சேவை உத்சவம் விமரிசையாக நடந்தது.
குன்றத்துார் அருகே உள்ள சோமங்கலம் பகுதியில், 900 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சவுந்தரவல்லி தாயார் உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இங்கு, ஆனி மாதம் அஸ்த நட்சத்திரத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, பெருமாளுக்கு திருமஞ்சனம் எனும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நேற்று காலை, கருட வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி, வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இருசக்கர வாகன விற்பனை: எகிறும் ஹீரோ, இறங்கும் ஹோண்டா
-
அமலுக்கு வருகிறது டிரம்ப்பின் வரி குறைப்பு மசோதா; அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு நிம்மதி
-
'கடனை முன்கூட்டியே செலுத்தினால் கட்டணம் வசூலிக்க கூடாது': வங்கிகளுக்கு தடை விதித்தது ரிசர்வ் வங்கி
-
பெரியப்பாவை கொன்றவர் கைது
-
கோஷம் போட்டா வேற மாதிரி ஆகிடும்; மறியலில் ஈடுபட்டோரை எச்சரித்த விருதுநகர் எஸ்.பி.,
-
பழநியில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்
Advertisement
Advertisement