பெரியப்பாவை கொன்றவர் கைது

நரிக்குடி; நரிக்குடி குருவியேந்தல் நிழற்குடையில் வெட்டுக் காயங்களுடன் முதியவர் ராமு இறந்து கிடந்தார். போலீஸ் விசாரணையில், சொத்துக்காக தம்பி மகன் கொலை செய்தது தெரிந்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

நரிக்குடி குருவியேந்தல் நிழற்குடை அருகே சிவகங்கை மாவட்டம் ஆவரங்காட்டை சேர்ந்த ராமு 68, குடிசை அமைத்து, 25 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். திருமணம் ஆகவில்லை. வருமானத்திற்காக கருவாடு விற்றார். இந்நிலையில் ஜூலை 1ல் வெட்டுபட்டு நிழற்குடையில் இறந்து கிடந்தார். நரிக்குடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் ராமு உடன் பிறந்த தம்பி லட்சுமணன் மகன் பாண்டி 27, கொலை செய்தது தெரிந்தது. அவரை நேற்று போலீசார் கைது செய்து விசாரித்ததில், ஆவரங்காட்டில் சொத்துக்கள் உள்ளன. அதில் ராமுக்கு ஒதுக்கப்பட்ட சொத்து உள்ளது. வாரிசு இல்லாததால், சொத்துக்களை தம்பி மகன் பாண்டி கேட்டார். தர மறுத்ததால் ஆத்திரமடைந்து தனியாக இருந்த ராமுவை அரிவாளால் வெட்டி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

Advertisement