பழநியில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்

பழநி; பழநி முருகன் கோயிலுக்கு ஜப்பான் டோக்கியோவை சேர்ந்த 15 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தனர்.

இவர்கள் கோயிலில் தரிசனம் முடித்த பின்பு போகர் சன்னதியில் வழிபாடு செய்தனர். அதன்பின் வடக்கு கிரி வீதியில் புலிப்பாணி ஆசிரமத்தில் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் உலக நலன் வேண்டி சிறப்பு யாகத்தில் கலந்து கொண்டனர்.

Advertisement