மருந்து கடையில் ரூ.40,000 திருட்டு
சைதாப்பேட்டை, சைதாப்பேட்டையில், தனியார் மருந்தகத்தின் பூட்டை உடைத்து, 40,000 ரூபாய் திருடப்பட்டுள்ளது.
நந்தனம், சி.ஐ.டி., நகரை சேர்ந்தவர் ரிஸ்வான், 45. இவர், அதே பகுதியில் மருந்தகம் நடத்தி வருகிறார். நேற்று, கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
அதிர்ச்சியடைந்த ரிஸ்வான், கடைக்குள் சென்று பார்த்தபோது, கல்லா பெட்டியில் இருந்த, 40,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்படி, சைதாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement